கூப்பன் மாத் தோசை (சைவம்)

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

முதலில் கூப்பன் மா என்ன என்பதை விளக்குகிறேன். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடையில் ஒரு குடும்பத்திற்கு கூப்பனுக்கு( ration) வழங்கப்படும் கோதுமை மாவைத்தான் (plain flour)கூப்பன் மா என்று சொல்லப்படுகிறது. இந்தக் கூப்பன் மாவில் செய்யப்படும் தோசை என்பதால் "கூப்பன் மா தோசை " எனப்படுகிறது.


தேவையான பொருட்கள்

1 கப் உழுத்தம் பருப்பு
3
கப் கூப்பன் மா (plain flour)
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு


செய் முறை

உழுத்தம் பருப்பை 4 மணித்தியாலம் ஊறவ
ிடவும். பின் அதைக் கழுவி அரைத்தெடுக்கவும்.

மாவை நீராவியில் அவித்து
, அரிக்கனால் (சல்லடை) அரித்து, அரைத்து வைத்த உழுந்துடன் மாவையும் சேர்த்து உப்பும் தேவையான்ளவு இட்டு 6 மணித்தியாலம் (வெப்ப காலங்களில் புளிக்கவிடவும்.குளிர் காலங்களில் அவிணை (oven) சூடாக்கி பின் நிப்பாட்டிவிட்டு, அதற்குள் தோசைமாவை இரவுமுழுவதும் வைத்தால் புளித்துவிடும்.






பின்பு
, தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுடவும்.தடிப்பான தோசையாகவும் சுடலாம்; மெல்லிய முறுகல் தோசையாகவும் சுடலாம்.

__________________________________________________________________-
செய்து பார்த்து கருத்தைச் சொல்லுங்கள்.

.

8 comments:

கானா பிரபா said...

பிறீமா மா எண்டும் சொல்லுவினம், நல்லெண்ணைத் தோசை எண்டால் எனக்கு உயிர்,

ஏன் கணினி எழுத்தெல்லால் (படத்துக்குப் பக்கத்தில்) முறிஞ்சு தெரியுது?

வல்லிசிம்ஹன் said...

கொதுமைமாவே பிடித்துவிடும் போல இருக்கிறது,
செல்லி உங்க பதிவைப் பார்த்து.
இதை
நல்லபடியா செய்து சாப்பிட்டுச் சொல்லுகிறேன்.

செல்லி said...

பிரபா
பிறீமா மா கேள்விப்பட்டிருக்கிறன் பிறீமா பாண் திண்டிருக்கிறம் அது 70களின்ர பிற் பகுதிகளில வந்திருக்குமெண்டு நினைக்கிறன்?
பிழையெண்டாச் சொல்லுங்கோ.
//நல்லெண்ணைத் தோசை எண்டால் எனக்கு உயிர்,//
அத்வும் நல்லா முறுகவிட்டு, இடி சம்பலோட தின்னவேணும் அதெல்லோ தோசை.
//ஏன் கணினி எழுத்தெல்லால் (படத்துக்குப் பக்கத்தில்) முறிஞ்சு தெரியுது?//
எந்தப் படம் எண்டு சொன்னா திருத்திபோடுவன். புது அனுபவமெண்டதில ஒரு னாசமும் கெதியா விள்ங்குதில்லை.
அடிக்கடி வந்து நல்லது கெட்டது களைச் சொன்னா எங்களுக்கும் ஒரு உற்சாகம் வருமல்லோ.
நன்றி.

செல்லி said...

வல்லி
கோதுமை மா பலவித பயன்பாடுள்ள ஒரு மா.அதில் புட்டு, இடியப்பம்,ரொட்டி இன்னும் நிறைய பலகாரங்கள் செய்யலாம்.
தோசையைச் செய்து சாப்பிடேக்கை என்னையும் நினையுங்கோ!
நன்றி

வல்லிசிம்ஹன் said...

சாப்பிட்டேன் நினைத்தேன் செல்லி. இடி சம்பல் என்றால் என்ன,?
துவையலா,பொடியா.

செல்லி said...

வல்லிசிம்ஹன் said...
//இடி சம்பல் என்றால் என்ன,?//
இடிக்கிற சம்பல். உங்களுக்காக அடுத்த பதிவில இதை போடுறேனே.
நன்றி வல்லி இங்கு வந்ததிற்கும், என்னை நினைத்ததிற்கும்.

Anonymous said...

நீங்கள் ஒஸ்ரெலியாவா? :)
செய்முறைக்கு நன்றி

செல்லி said...

ஓம் தூயா. நீங்கள் நியூசிலாந்தில இருந்திட்டு இப்ப சிட்னிக்கு வந்திட்டியள் போல.
எப்பிடி சுகமா?
பின்னூட்டத்திற்கு நன்றி