செவ்வரத்தம் பூ சலட்/ சம்பல் (சைவம்)

யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது செவ்வரத்தம் பூச் சம்பல் செய்து சாப்பிடுவோம். அது மிகவும் நல்ல உருசியாக இருக்கும். அவுஸ்திரேலியாவில் எங்கே இப்படிச் செய்து சாப்பிட முடியும் என ஏக்கமாக இருந்தது. ஏனென்றால் செவ்வரத்தம் பூவிற்கு எங்கே போவது?. ஆனால், இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில் எப்பவுமே கிடக்கிறது. கிடைச்சா சும்மா இருக்க முடியுமா?, உடனே ஒரு சம்பல் செய்து சாப்பிட்ட பின்னர்தான் மிச்ச வேலை.
செவ்வரத்தம் பூ (
Hibiscus flower ) சத்துள்ள, மருத்துவ குணமுள்ள, சாப்பிடக் கூடிய பூ. தமிழகத்தில் இதனை செம்பருத்தி பூ என்பர். இந்தப் பூவை குளிர் பானம், சம்பல், சலட், குழம்பு என பலவகையிலும் பயன்படுத்தலாம்.

செவ்வரத்தம் பூ சலட்

தேவையான பொருட்கள்

செவ்வரத்தம் பூ 20
சிவப்பு வெங்காயம் (salad onion) 1
வெட்டிய புதினா இலை 1கப்
பச்சை மிளகாய் 1
எலுமிச்சம்பழம் பாதி
தேவையான அளவு உப்பு

செய்முறை















செவ்வரத்தம் பூவைச் சுத்தம் செய்து சின்னஞ் சிறிதாக வெட்டவும்.
சிவப்பு வெங்காயம் (salad onion) ,பச்சை மிளகாய் என்பவற்றையும் வெட்டயவுடன், வெட்டிய புதினா இலை, செவ்வரத்தம் பூவையும் உப்பையும் மரக் கரண்டியால் கலந்து வைக்கவும். சாப்பிடத் தயாரனவுடன் எலுமிச்சம்பழப் புளியையும் விட்டு கிளறிவிடவும்.

இந்த சலட் பாணுடன் "சான்விச" மாதிரி செய்து சாப்பிடலாம். ரொட்டிக்குள் வைத்து "சலட் றப்"(salad wrap) போலச் செய்தும் சாப்பிடலாம்.

சோறு, புட்டுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்
வெங்காயம் பிடிக்காதவர்கள் "சுக்கினி" (zucchini)யை துருவலாக்கிச் சேர்க்கலாம்.

சம்பல் செய்யும் முறை:

1/2 கப் தேங்காய்ப் பூவை கூட்டாக அரைத்து இந்த சலட்டுடன் சேர்த்தால் செவ்வரத்தம் பூச் சம்பல் ஆகிவிடும்.

எல்லாம் சரி, பூவுக்கு எங்க போறதுன்னு யாரோ பேசற மாதிரி கேட்கிறது.
வந்ததுதான் வந்தோம் வெளி்நாட்டுக்கு, குளி்ர்நாடுகளில இது குதிரைக் கொம்பாவல்ல இருக்குது.
இதுக்காகவாவது ஒரு தடவை குயின்ஸ்லாந்து வந்திட்டுப் போலாமே!

_செல்லி____________________________________________________________________--
சரி,சரி..உங்க பதில அப்புறமா வந்து சொல்லாம இப்பவே சொல்லிட்டுப் போங்க. நன்றி
.

இந்தப் பூவை தெரியுமா? இதில் சம்பல்/சலட் செய்யலாம்

என்ன பூ என்று சொல்லுங்கள்.

இதில் சலட்/சம்பல் எப்படிச் செய்வது என்று சொல்கிறேன்.
.

இடி சம்பல் - சைவம்




தேவையான் பொருட்கள்

செத்தல் மிளகாயைப் 8
தேங்காய்ப்பூ 2 கப்
வெங்காயம் 1/4 கப்
உப்பு, தேவையான் அளவு
கறிவேப்பிலை தேவையான் அளவு


செய்முறை

செத்தல் மிளகாயைப்யைப் பொரித்து,/வறுத்து உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ எல்லவற்றையும் சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொள்ள் வேண்டும். இது கொஞ்சம் ஈரப்பற்றில்லாத்தாயிருக்கும். இச் சம்பலை யாழ்ப்பாணத்தில் பிட்டு, இடியப்பம், தோசை இவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்
.

கூப்பன் மாத் தோசை (சைவம்)

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

முதலில் கூப்பன் மா என்ன என்பதை விளக்குகிறேன். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடையில் ஒரு குடும்பத்திற்கு கூப்பனுக்கு( ration) வழங்கப்படும் கோதுமை மாவைத்தான் (plain flour)கூப்பன் மா என்று சொல்லப்படுகிறது. இந்தக் கூப்பன் மாவில் செய்யப்படும் தோசை என்பதால் "கூப்பன் மா தோசை " எனப்படுகிறது.


தேவையான பொருட்கள்

1 கப் உழுத்தம் பருப்பு
3
கப் கூப்பன் மா (plain flour)
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு


செய் முறை

உழுத்தம் பருப்பை 4 மணித்தியாலம் ஊறவ
ிடவும். பின் அதைக் கழுவி அரைத்தெடுக்கவும்.

மாவை நீராவியில் அவித்து
, அரிக்கனால் (சல்லடை) அரித்து, அரைத்து வைத்த உழுந்துடன் மாவையும் சேர்த்து உப்பும் தேவையான்ளவு இட்டு 6 மணித்தியாலம் (வெப்ப காலங்களில் புளிக்கவிடவும்.குளிர் காலங்களில் அவிணை (oven) சூடாக்கி பின் நிப்பாட்டிவிட்டு, அதற்குள் தோசைமாவை இரவுமுழுவதும் வைத்தால் புளித்துவிடும்.






பின்பு
, தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுடவும்.தடிப்பான தோசையாகவும் சுடலாம்; மெல்லிய முறுகல் தோசையாகவும் சுடலாம்.

__________________________________________________________________-
செய்து பார்த்து கருத்தைச் சொல்லுங்கள்.

.